தஞ்சாவூர், ஜூலை 20: தஞ்சை வடக்குவாசல் ராஜகோரி சுடுகாடு அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அரிவாளை காட்டி ஒருவர் மிரட்டுவதாக தஞ்சை மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். அங்கு பொதுமக்களை அச்சுறுத்திய வாலிபரை பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர்.
விசாரணையில் தஞ்சை வடக்கு அலங்கம் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரது மகன் கார்த்தி (30) என்பதும், இவர் அந்த பகுதி வழியாக சென்றவர்களை தகாதவார்த்தைகளால் திட்டியதுடன், அரிவாளை காட்டி மிரட்டியதும் தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்தியை கைதுசெய்தனர்.