தஞ்சாவூர், ஆக. 31: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சீனிவாசநல்லூர், அண்ணா நகர் பகுதியை சேர்ந்த ராமன் என்பவரின் மகன் விக்கி (எ) விக்னேஷ்,(31). இவர் மீது கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல திருவிடைமருதூர் வட்டம், மரத்துரை, தெற்குத் தெரு என்ற முகவரியில் வசிக்கும் வெள்ளைச்சாமி மகன் சக்கரவர்த்தி,(35). இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் அவர்கள் 2 பேரையும் திருச்சி மத்திய சிறையில் தடுப்புக் காவலில் வைத்திட தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட நடுவர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்.