தஞ்சாவூர், செப்.1: தஞ்சாவூர் மாவட்ட மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் மனமகிழ் சங்கம கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் தென்னை விஞ்ஞானி செல்வம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் துரை.கோவிந்தராஜ் வரவேற்றார். தஞ்சாவூர் லயன்ஸ் மண்டலத் தலைவர் முகம்மது ரபிக் முன்னிலை வகித்தார். விழாவில் சிலம்பாட்டக்கலை பயிற்சியாளரும், கிராம நிர்வாக அலுவலருமான பிரபாகருக்கு ‘சிலம்பாட்டக்கலை பயிற்றுநர் செம்மல்’ எனும் சிறப்பு விருது வழங்கப்பட்டது. சங்கத்தின் நிறுவனர் நெடுஞ்செழியன் வாழ்த்திப் பேசினார். பேராசிரியை ஜெயந்தி ‘பட்டாம் பூச்சிப் பருவம்’ எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். திருச்சி தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. விழாவில் அய்யாறு புகழேந்தி, வெ.கண்டிமுத்து கவிஞர் அரவிந்தன், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக சங்கத்தின் இணைச் செயலர் பாஸ்கர் நன்றி கூறினார்.