தஞ்சாவூர், ஆக.23: தஞ்சாவூர் அடுத்த களிமேடு பரிசுத்தம் நகரை சேர்ந்தவர் குமார் (50). இவர் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே தனது பைக்கை நிறுத்தி விட்டு அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்று திரும்பி வந்து பார்த்தார். அப்போது, பைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தார். எங்கு தேடியும் கிடைக்காததால் தஞ்சாவூர் மேற்கு போலீஸ் நிலையத்தில் குமார் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.