தஞ்சாவர், ஜூன் 30: பழுதான மின்மாற்றிகள் உடனுக்குடன் பழுது நீக்கம் செய்து சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விமலா தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
ஜூன் மாதம் 2025ல் 41 எண்ணிக்கை புதிய மின்மாற்றிகள் ரூ.1 கோடியே 43.5 லட்சம் செலவில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு இயக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. 2024, 25ம் ஆண்டு இலக்கீட்டின் படி, சாதாரண திட்டத்தில் 57 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தட்கல் திட்டத்தில் 254 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
25000 திட்டத்தில் 1, 50000 திட்டத்தில் 1, கலைஞரின் ஒருங்கிணைந்த அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தில் 27, தாட்கோ திட்டத்தில் 6 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 350 சிறப்பு முன்னுரிமை திட்டத்தில் 11 மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.