தஞ்சாவூர், ஆக.22: இந்திய அஞ்சல் துறை சார்பில் தஞ்சாவூர் அஞ்சல் கோட்டத்தில் மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்க உள்ளதாக தஞ்சை கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி தெரிவித்துள்ளார்.இந்திய தபால் துறை மற்றும் சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு இணைந்து மாநகராட்சி மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு சிவகங்கை பூங்காவில் இருந்து தஞ்சை பெரிய கோயில் வரை மரபு நடை நிகழ்ச்சி (20.08.2024) நடந்தது. களஞ்சியம்79\”இ. தபால் துறை கண்காட்சியின் சின்னமான ‘டுகாங்’ எனும் கடல் பசுவின் சின்னம் அனைவருடைய பார்வைக்கும் வைக்கப்பட்டிருந்தது.
தஞ்சை பெருவுடையார் கோயிலின் சிறப்புகளையும் முக்கியமான கல்வெட்டுகளையும் சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழு தலைவர் டாக்டர் உதயசங்கர் பள்ளி மாணவர்களுக்கு தெளிவாக விளக்கினார். இறுதியில் பள்ளி மாணவர்களுக்கு தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு விழாவில் தபால் தலை வெளியிட்டது மற்றும் தபால் தலை சேகரிப்பு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. மாவட்ட அளவிலான தபால் துறை கண்காட்சி களஞ்சியம் 79° இ சின்னம் பொறித்த தொப்பிகள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் அக்டோபர் மாதம் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடக்கவிருக்கும் களஞ்சியம் தபால்தலை கண்காட்சியைக் காண மிகவும் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.