கோவை, மே 23: கோவை பெரிய கடைவீதியை சேர்ந்தவர் கமலநாதன் (42). இவர் அதே பகுதியில் நகை கடை நடத்தி வருகிறார். கடையில் விளாங்குறிச்சியை சேர்ந்த சரவணன் (40) என்பவர் இந்த கடையில் நிர்வாகியாக இருந்தார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக இவர் கடையில் இருந்த 660 கிராம் எடையிலான தங்க நகைகளை திருடியதாக தெரிகிறது. சமீபத்தில் இதை கண்டறிந்த கமலநாதன், இது தொடர்பாக பெரிய கடை வீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சரவணனை கைது செய்தனர். இவரிடம் இருந்து 102 கிராம் எடையிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது.
இன்னும் சுமார் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 558 கிராம் எடையிலான தங்க நகைகள் மீட்க வேண்டியுள்ளது. சரவணன் திருடிய தங்க நகைகளை விற்று செலவு செய்துவிட்டதாக போலீசாரிடம் தெரிவித்தார். நான் நகைகளை வைத்து ஜாலியாக செலவு செய்து வந்தேன். 6 மாதத்திற்கு மேலாகியும் தங்க நகைகள் திருடிய விவரம் என் கடை உரிமையாளருக்கு தெரியவில்லை. அதனால் தொடர்ந்து திருடி வந்தேன் என அவர் தெரிவித்தார். போலீசார் மீதமுள்ள தங்க நகைகளை மீட்க முயற்சி செய்து வருகின்றனர்.