அண்ணன் தூக்கிட்டு தற்கொலை மானூர், மே 24: மானூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார்(24). இவரது தங்கைக்கு பெற்றோர் மற்றும் முத்துக்குமார் வரன் பார்த்து பேசி கொண்டிருந்தனர். ஆனால் அவரது தங்கை, வேறொருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முத்துக்குமார் (24), நேற்று முன்தினம் இரவு வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் வெகுநேரமாகியும் வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் அறையின் கதவை திறந்து பார்த்த போது முத்துக்குமார் தூக்கில் தொங்கியவாறு இறந்தது கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த மானூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முத்துக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தங்கை காதல் திருமணம் செய்து கொண்டதால் விரக்தி
0
previous post