மதுரை, நவ. 7: மதுரை, வண்டியூர் சி.எம்.நகர், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் (27). இவரது சித்தப்பா மகள் ஆனந்தியும் வண்டியூரைச் சேர்ந்த அபிஷேக் என்பவரும் காதலித்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன் ஆனந்தி மாயமானர். ஒரு வாரத்துக்கு முன்பு அவர் வீடு திரும்பிய நிலையில் ஆனந்தியின் காதலனான அபிஷேக்கை சந்தித்து, தன் தங்கையுடனான காதலை கைவிடும்படி வடிவேல் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அபிஷேக் அவரது நண்பரான அண்ணா நகர், முந்திரி தோப்பைச் சேர்ந்த கட்டாரி கோபி என்பவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வண்டியூர், சங்கு நகரில் வடிவேல் நடந்து சென்றபோது அவரை, கட்டாரி கோபி வழிமறித்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த வடிவேல் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் புகாரின்பேரில் வழக்கு பதிந்து கட்டாரி கோபியை கைது செய்து விசாரிக்கின்றனர்.