எப்படிச் செய்வது?கடாயில் எண்ணெய் + வெண்ணெய் சேர்த்து பிரிஞ்சி
இலை, வெங்காயம், செலரி, கேரட், பூண்டு, தக்காளி, உப்பு, முழு மிளகு
சேர்த்து மூழ்கும்; அளவிற்கு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
வெந்ததும் இறக்கி ஆறவைத்து பிரிஞ்சி இலையை நீக்கி விட்டு மிக்சியில் நைசாக
அரைத்து; வடித்தெடுத்து கொள்ளவும். மீண்டும் கடாயில் ஊற்றி தேவையான
அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். சூப் நன்கு கொதித்ததும், (தண்ணியாக
இருந்தால் கார்ன்ஃப்ளாரை; கரைத்து ஊற்றி திக் செய்யலாம்.) கடைசியாக திக்
கிரீம் (மலாய்) சேர்த்து கிளறி இறக்கவும். குரூட்டான்ஸ் செய்ய, கடாயில்
வெண்ணெய் சேர்த்து; உருகியதும் நறுக்கி வைத்துள்ள பிரெட் துண்டுகளை
பொரித்தெடுக்கவும். சூப்பை குரூட்டான்ஸு டன் பரிமாறவும்.
தக்காளி சூப்
previous post