செய்முறை இட்லி அரிசியை ஊற வைத்து இஞ்சி, மிளகாய் வற்றல், தக்காளி சேர்த்து அடைமாவு பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி மாவில் போடவும். பின் உப்பு சேர்த்து கலந்து அடைகளாக வார்க்கவும். அடையை சுற்றிலும் எண்ணெயை தூவி விட்டு, பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும். பின் திருப்பி போட்டு வேக விடவும்.மணமணக்கும் சுவையில் தக்காளி அடை ரெடி.