குமாரபுரம், ஆக.4: குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் செல்வி (49). இவர் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார். தக்கலை தீயணைப்பு நிலையம் அருகில் வரும்போது எதிர்பாராத விதமாக முன்னே செல்லும் கார் வலது புறம் திடீரென திரும்பியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை தீயணைப்பு நிலைய வீரர்கள் காப்பாற்றி தீயணைப்பு வாகனத்தில் ஏற்றி தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய அலுவலர்கள், வீரர்களுக்கு அப்பகுதியினர் பாராட்டு தெரிவித்தனர்.
தக்கலை அருகே விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்ட தீயணைப்பு வீரர்கள்
previous post