தக்கலை, ஆக.5: தக்கலை அருகே உள்ள காட்டாத்துறை பருத்திவிளையை சேர்ந்தவர் திலீபன்(58). கராத்தே மாஸ்டரான இவர் வாள்வச்சகோஷ்டம் பேரூராட்சி கவுன்சிலராக உள்ளார். இவர் சம்பவத்தன்று பைக்கில் முளகுமூட்டில் இருந்து சுாமியார்மடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த திலீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பான புகாரின் பேரில் கார் ஓட்டிவந்த கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த உமேஷ் மீது தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.