குமாரபுரம், நவ.19 : தக்கலை அருகே புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெனகராஜ் (26). ராணுவ வீரர். லடாக்கில் பணி புரிந்து வருகிறார். தற்போது விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளார். இந்தநிலையில் வீட்டு மதில்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு கும்பலுடன் வந்த வார்டு கவுன்சிலரின் கணவர் காசிலிங்கம் திடீரென மதில் சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது ராணுவ வீரரை தாக்கி மிரட்டல் விடுத்து சென்று உள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த ஜெனகராஜ் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் ராணுவ வீரரை தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இதையடுத்து தக்கலை போலீசார் ராணுவ வீரர் மீதான தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை அருகே ராணுவ வீரர் மீது தாக்குதல்
0
previous post