தக்கலை, மே 18 : தக்கலை அருகே விபத்தில் மெக்கானிக் பலியானார். சுங்கான்கடை வட்டவிளையை சேர்ந்தவர் சத்திய மூர்த்தி (27). இவர் தனியார் வாகன நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக உள்ளார். நேற்று முன்தினம் மாலை சத்தியமூர்த்தி களியக்காவிளை பகுதியில் வாகனம் ஒன்றின் பழுதை சரி செய்து விட்டு நாகர்கோவில் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார். தக்கலை அருகே புலியூர்குறிச்சி பகுதியில் வரும் போது, முன்னால் சென்ற அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த மினி பஸ்சில் சத்தியமூர்த்தியின் பைக் உரசியது. இதில் மினி பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் பைக்குடன் சத்திய மூர்த்தி சிக்கினார். இது குறித்து தகவல் அறிந்த தக்கலை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்திய மூர்த்தியை மீட்டனர். தொடர்ந்து தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த போது சத்தியமூர்த்தி ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்ெகாண்டு வருகின்றனர்.
தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி
93