குமாரபுரம், ஜன.20: தக்கலை அருகே உள்ள கொல்லன்விளை பார்த்தசாரதி கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி வசந்தா (57). இவர் மருந்து வாங்குவதற்காக நாகர்கோவிலுக்கு சென்றார். பின்னர் மருந்து வாங்கிவிட்டு அண்ணா பேருந்து நிலையத்தில் பஸ் ஏற காத்திருந்தார். தொடர்ந்து பெருஞ்சிலம்பு பகுதிக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்தார். பின்னர் கொல்லன்விளை பகுதியில் வந்து இறங்கினார். அப்போது வசந்தா அணிந்து இருந்த 5 1/2 பவுன் செயின் மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி அருகில் இருந்தவர்களிடம் செயின் பற்றி கேட்டார். ஆனால் பஸ்சில் இருந்தவர்கள் நாங்கள் பார்க்கவில்லை என்று கூறி உள்ளனர். உடனடியாக இதுகுறித்து தக்கலை போலீசில் வசந்தா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஸ்சில் வைத்து தான் மர்ம நபர் யாரேனும் வசந்தா அணிந்திருந்த செயினை திருடி இருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்கலை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணின் செயின் அபேஸ்
70