தக்கலை, ஆக. 23: தக்கலை அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ஜெரோம் தலைமை வகித்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் பஷீராநஸ்ரின் வரவேற்றார். முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ஹைதர் அலி, செயலாளர் ஷாஜகான், ஒருங்கிணைப்பாளர் ஜமாலுதீன் மற்றும் முன்னாள் டிஎஸ்பி மோகன்ராஜ், முன்னாள் எம்எல்ஏ நூர் முகமது உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தில் பள்ளி நூற்றாண்டு விழாவை டிசம்பர் மாதம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ஷிபானா நன்றி கூறினார்.