தக்கலை, ஆக.15: இந்தியப் பாரம்பரிய கலை இலக்கியப் பேரவை சார்பில் தக்கலையில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக புத்தகக் கண்காட்சி நடந்தது. 15 நாட்கள் நடந்த இந்த கண்காட்சியின் நிறைவு விழா இலக்கிய நிகழ்ச்சிக்கு பாலபிரஜாபதி அடிகளார் தலைமை வகித்தார். ஜெயாதரன் வரவேற்றார். தக்கலைச் சந்திரன், லெனின் முன்னிலை வகித்தனர். கலையூர் காதர், கண்ணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். பத்மநாபபுரம் சார்பு நீதிபதி மாரியப்பன் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார். தாரகை கத்பர்ட் எம்எல்ஏ, மாவட்ட வருவாய் முதுநிலை ஆய்வாளர் ஐரின் செல்வி ஆகியோர் ஓவிய ஆசிரியர்களுக்கு விருது வழங்கி சிறப்புரை ஆற்றினர். நாவலாசிரியர் மலர்வதி சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். வழக்கறிஞர்கள் முத்துக்குமரேஷ், சிவகுமார், வித்யா, பொறியாளர் அப்துல் சமது, புலவர் இரவீந்திரன், தக்கலை பென்னி, ஆசிரியர் அரங்கசாமி, கவிஞர் சிபி, வரலாற்று ஆய்வாளர் சாகுல் ஹமீது, டாக்டர் முருகேசன், கவிஞர் பிரான்சிஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கலை இலக்கியப் பேரவையின் தலைவர் சிவனி சதீஷ் நன்றி தெரிவித்தார்.
தக்கலையில் புத்தக கண்காட்சி நிறைவு விழா
previous post