நாகர்கோவில், நவ. 5: திருவட்டார் அருகே செங்கோடி பெருஞ்சக்கோணம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (56). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று தக்கலை பழைய பஸ் நிலையம் சாலையில் நின்று கொண்டு, பீடி புகைத்துக் கொண்டிருந்தார். அப்போது மேக்காமண்டபம் காஞ்சிரத்துக்கோணம் பகுதியை சேர்ந்த கோபாலன் (50) என்பவர் சந்திரனிடம், தனக்கும் ஒரு பீடி தருமாறு கூறினார்.
ஆனால் சந்திரன் தன்னிடம் பீடி இல்லை என தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த கோபாலன் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து சந்திரனின் தலையில் பலமாக தாக்கினார். இதில் சந்திரனுக்க நெற்றி, பின் தலை உள்ளிட்ட இடங்களில் ரத்த காயம் ஏற்பட்டது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கோபாலனை கைது செய்தனர்.