மூணாறு, ஜூன் 20: கேரளா மாநிலம் மூணாறு அருகே கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையின் பாகமாக உள்ள தேவிகுளத்தில் இயங்கி வரும் சுங்கச்சாவடியின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவிகுளம் துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட அவசர காலகட்டத்தில் வாகனங்கள் செல்லும் பாதையில் சில தடைகள் உள்ளதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தடைகள் சரி செய்யப்பட்ட பின் சுங்கச்சாவடி திறந்து செயல்படும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.