பழநி, நவ.22: பழநியில் இருந்து மதுரை மற்றும் கோவை வழித்தடத்தில் ஏராளமான தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த தனியார் பஸ்களுக்குள் குறிப்பிட்ட நேரத்தில் எடுத்துச் செல்வது தொடர்பாக அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். இந்நிலையில் பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம் சென்ற 2 தனியார் பஸ்களிள் ஓட்டுநர்களிடையே பச்சளநாயக்கன்பட்டி அருகில் பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பாக நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் 2 ஓட்டுநர்களும் நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆயக்குடி போலீசார் 2 பஸ்களையும் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் நிறுத்தினர். மேலும் 2 பஸ்களின் ஓட்டுநர்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.