ஊட்டி,பிப்.14: டெல்லியில் நடந்த குடியிரசு தின அணிவகுப்பில் கலந்துக் கொண்ட ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவருக்கு பாராட்டு குவிகிறது. டெல்லி குடியரசு தின அணிவகுப்பு இந்தியாவின் குடியரசு தின கொண்டாட்டங்களைக் குறிக்கும் அணிவகுப்புகளில் மிக முக்கியமானது. இந்த அணிவகுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதி அன்று புதுடெல்லியில் நடைபெறுகிறது.மூன்று நாட்கள் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவின் முக்கிய அணிவகுப்புகள் நடைபெறும்.இதில், இந்தியா முழுவதும் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளை சேர்ந்த திறமையான என்சிசி., மாணவர்கள் கலந்து கொள்வது வாடிக்கை.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பாதுகாப்பியல் துறையில் படிக்கும் பரமக்குடியை சேர்ந்த ரித்திக் சீனிவாசன் கடந்த 26ம் தேதி டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.கல்லூரிக்கு திரும்பிய அவருக்கு கல்லூரி முதல்வர் ராமலட்சுமி, நீலகிரி மாவட்ட தேசிய மாணவர் படை தலைமை அதிகாரி சந்தோஷ் குமார்,தேசிய மாணவர் படை அதிகாரிகள் பத்மநாபன், தேவீந்தர் சிங், விஜய் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.