திருத்துறைப்பூண்டி, மே 29: இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் இந்திய சர்வதேச ஜனநாயக தேர்தல் மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில், 2026 சட்டம் மன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் திருத்துறைப்பூண்டி நகர் மன்ற உறுப்பினர் மற்றும் நகர தலைவருமாகிய எழிலரசன் கலந்துகொண்டு பயிற்சியில் பங்கேற்றார். புதுடெல்லியில் பயிற்சிக்கு சென்று வந்த இவரை திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி துரைவேலன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
டெல்லிக்கு பயிற்சி சென்று வந்த காங்கிரஸ் நகர தலைவருக்கு பாராட்டு
0