ஈரோடு, செப். 22: கோபியை அடுத்துள்ள சிறுவலூர், நடுவண்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (34). கார்மெண்ட்ஸில் டெய்லராக வேலை செய்து வந்தார். கடந்த 19ம் தேதி இரவும் மது குடித்துவிட்டு போதையில் வீட்டுக்கு வந்த ரமேசுக்கும் அவரது மனைவி பிரேமலதாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை தூங்கி எழுந்து பிரேமலதா வெளியில் வந்து பார்த்தபோது, வீட்டின் தாழ்வாரத்தில் ரமேஷ் கயிற்றில் தூக்கில் தொங்கியுள்ளார். அதைப்பார்த்து பிரேமலதா சத்தம் போட்டுள்ளார்.
இதையடுத்து, அருகில் வசிக்கும் உறவினர்கள் ஓடி வந்து, ரமேஷை மீட்டு பார்த்தபோது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து, சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். சத்தியமங்கலம் அடுத்துள்ள கெஞ்சனூர், சின்னகுளத்து தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (63). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் தனது அண்ணன் செல்வராஜ் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பழனிசாமி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து, சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.