திருச்சி, ஜூன் 26: டென்சிங் விருதிற்கு வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. 2024ம் ஆண்டிற்கான டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதுகள் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருதுக்கு விண்ணப்பிக்க நிலம், நீர், ஆகாயம் இவற்றில் சாகசம் புரிந்த தகுதி மற்றும் திறமை உள்ளவா்கள் 2022 முதல் 2024 வரை கடந்த 3 ஆண்டுகளில் புரிந்த வாழ்நாள் சாதனைக்கான விவரங்களை ஆவணங்களுடன் வரும் 30ம் தேதிக்குள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரா்கள் விண்ணப்பங்களை https://awards.gov.in, என்ற இணையதள முகவாியில் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து வரும் 30ம் தேதிக்குள் நேரடியாக இந்திய அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களுக்கு திருச்சி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், (தொலைபேசி எண்.0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.