சேலம், நவ.16: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிர மடைந்துள்ளதால், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், சளி காய்ச்சல் பாதிப்புகளால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதன்படி, நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் 3 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை பரிசோதனை முடிவின் படி, புதிதாக 4பேருக்கு டெங்கு பாசிட்டிவ் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.