கோவை, ஜூலை 4: இங்கிலாந்து பம்பு உற்பத்தியாளர்கள் சங்கமும், ஐரோப்பிய முன்னணி பம்பு உற்பத்தி தொழில் கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த விழாவில், டெக்கான் பம்ப்ஸ் நிறுவனத்தின் நவீன இயந்திர தொழில்நுட்ப மையத்திற்கு, சிறந்த சப்ளையர் விருது வழங்கப்பட்டது.
இந்த விருது டெக்கான் பம்ப்ஸ் நிறுவனர் மற்றும் நிர்வாகத்தலைவர் ஆறுமுகம் மற்றும் செயல் இயக்குனர் கனிஷ்கா ஆறுமுகம் ஆகியோரிடம் வழங்கப்பட்டது.
கோவையை தலைமையிடமாகக்கொண்டு, இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் டெக்கான் பம்ப்ஸ் நிறுவனம், 1981 ம் ஆண்டு ஆறுமுகம் மற்றும் வேலுச்சாமி ஆகியோரால் துவங்கப்பட்டது. அந்த ஆண்டு முதல் ஓபன்-வெல் சம்ப் சப்மெர்சிபில் பம்புகள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது .