சேலம், செப்.4: சேலம் அருகேயுள்ள டி.பெருமாபாளையம் தாசநாயக்கன்பட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் கடந்த 26ம்தேதி சொர்ணபுரியில் உள்ள ஷோரூம் முன்பு அவரது விலை உயர்ந்த டூவீலரை நிறுத்தினார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. இதுகுறித்து பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதுபற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பக்கமுள்ள ரிஷிவந்தியம் பூபதி(23), உளுந்தூர்பேட்டை பக்கமுள்ள மலையனூர் அய்யப்பன்(24) மற்றும் 17 வயதான 2 சிறுவர்கள் ஆகியோர் போலீசில் சிக்கினர். இவர்களிடம் இருந்து திருட்டுபோன டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருந்து சேலம் வந்து டூவீலரை திருடிக்கொண்டு சென்று கள்ளக்குறிச்சி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் திருடி சென்ற 4க்கும் மேற்பட்ட டூவீலர்களை மீட்கும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
டூ வீலர் திருடிய சிறுவர்கள் உள்பட 4 பேர் சிக்கினர்
previous post