பாலக்கோடு, ஜூலை 2: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வேலாவள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சித்தன். இவரது மகள் சஷ்மிதா (9). தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம், வீட்டுக்கு அருகில் பள்ளி பஸ்சிற்காக சிறுமி காத்து கொண்டிருந்தாள். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த டூவீலர், அந்த சிறுமி மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சஷ்மிகாவை அங்கிருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இந்நிலையில், நேற்று தீவிர சிகிச்ைச பலனின்றி சஷ்மிகா பரிதாபமாக உயிரிழந்தாள். இது குறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் மோதி பள்ளி சிறுமி பலி
0
previous post