கிருஷ்ணகிரி, நவ.20: காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டியை சேர்ந்தவர் ஆனந்தராஜ்(34), கட்டிட மேஸ்திரியான இவர், நேற்று முன்தினம் குண்டலப்பட்டி – காவேரிப்பட்டணம் சாலையில் டூவீலரில் சென்ற போது, குண்டலப்பட்டி பகுதியில் பின்னால் வந்த லாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த ஆனந்தராஜ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பட்டணம் போலீசார், ஆனந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
டூவீலர் மீது லாரி மோதி கட்டிட மேஸ்திரி பலி
0
previous post