கிருஷ்ணகிரி, செப்.3: காவேரிப்பட்டணம் அடுத்த செட்டிமாரன்பட்டி கிருஷ்ணன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜேந்திரன்., இவர் நேற்று முன்தினம் தர்மபுரி – கிருஷ்ணகிரி சாலையில் சவுளுர் கூட்ரோடு மேம்பாலம் அருகே டூவீலரில் சென்றபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று, ராஜேந்திரனின் டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார், ராஜேந்திரன் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.