கிருஷ்ணகிரி, மே 15: கிருஷ்ணகிரி அடுத்த திப்பனப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (59), விவசாயி. இவர் திருவண்ணாமலை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், வேட்டியம்பட்டி அருகே டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார், டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டூவீலர் மீது கார் மோதி விவசாயி பலி
0
previous post