சேலம், ஆக.6: சேலம் அஸ்தம்பட்டி எம்டிஎஸ் நகரைச் சேர்ந்தவர் திருமணிசேகர். இவரது மனைவி சுனாசெல்வி(38). இவர் கடந்த மாதம் 31ம் தேதி தன்னுடைய டூவீலரை வீட்டின் முன் நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். மறுநாள் வௌியே வந்து பார்த்த போது, மர்ம நபர்கள் டூவீலரை திருடிச்சென்றது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த சுனாசெல்வி அஸ்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இதில் அஸ்தம்பட்டி நேதாஜி தெருவைச் சேர்ந்த கிச்சா (எ) கிருஷ்ணமூர்த்தி என்பவர் டூவீலரை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைந்தனர். மேலும், அவரிடம் இருந்த டூவீலரை பறிமுதல் செய்தனர்.