ஊத்தங்கரை, ஆக.30: ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை போலீஸ் எஸ்ஐ கணேஷ்பாபு மற்றும் போலீசார், திருப்பத்தூர்-திருவண்ணாமலை செல்லும் சாலையில், நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி வந்த சிறுவனை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அதில், அவன் சிங்காரப்பேட்டை தர்மராஜா பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து டூவீலரை வேகமாக ஓட்டி வந்ததற்காக, போலீசார் அவனை கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் விடுவித்தனர்.
டூவீலர் ஓட்டிய சிறுவன் கைது
previous post