தர்மபுரி, ஆக. 23: காரிமங்கலம் அடுத்த சங்கம்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி(47). விவசாயியான இவர், நேற்று முன்தினம் சொந்த வேலையாக டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்றுள்ளார். பின்னர், வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். பேகாரஅள்ளி- புலிகரை ரோட்டில் சுண்ணாம்பட்டி அருகே வந்தபோது, எதிரே வந்த மற்றொரு டூவீலர், சுப்பிரமணியின் டூவீலர் மீது பயங்கரமாக மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய மற்றொரு டூவீலர் குறித்து, போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
டூவீலர்கள் மோதி விவசாயி பலி
previous post