போடி, ஆக. 26: தேனி மாவட்டம் போடி அருகே டொம்புச்சேரி, பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த முனியாண்டி மகன் காளிராஜ்(32). இவர் நேற்று முன் தினம் தனது மகள் தர்ஷாஸ்ரீயுடன் டூவீலரில் போடி – தேவாரம் சாலையில் ரெங்கநாதபுரம் அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு டூவீலர் மோதியதில் தர்ஷாஸ்ரீ தூக்கி வீசப்பட்டு தலையில் படுகாயமடைந்தார்.
இதையடுத்து போடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் தீவிர சிகிச்சைக்காக தேனி மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காளிராஜ் அளித்த புகாரின்பேரில், விபத்துக்கு காரணமான டூவீலரை ஓட்டிவந்த போடி ரெங்கநாதபுரத்தை சேர்ந்த சரவணபெருமாள் மகன் சக்திவேல் மீது போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.