ரெட்டியார்சத்திரம், ஜூன் 24: ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி அருகே திருமலைப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கிய சாமி (32). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தனது டூவீலரில், தருமத்துப்பட்டியிலிருந்து திருமலைப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது காரமடை பிரிவு அருகே, தருமத்துப்பட்டியைச் சேர்ந்த கீரன் பாலாஜி (25) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் நேருக்கு நேர் மோதியது. இதில் ஆரோக்கிய சாமி, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த கீரன் பாலாஜி, சிகிச்சைக்காக திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.