வத்தலக்குண்டு ஜூலை 8: வத்தலக்குண்டு அருகே வெரியப்பநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஜெயராம். விவசாயி. இவர் தனது மனைவி முத்து பிரியா, 4 வயதுமகன் அஜய் மற்றும் 3 வயது மகளுடன் கடந்த ஜூன் 26ம் தேதி டூவீலரில் வத்தலக்குண்டு நோக்கி வந்து கொண்டிருந்தார். கன்னிமார் கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் வத்தலக்குண்டு வந்து விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
பழைய வத்தலக்குண்டு மயானம் அருகே வந்தபோது 2 டூவீலர்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் அனைவரும் காயமடைந்தனர். படுகாயமடைந்த சிறுவன் அஜய் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அஜய் உயிரிழந்தார். இதுகுறித்து வத்தலக்குண்டு எஸ்ஐ ராம்சேட் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.