கோபால்பட்டி, ஜூன் 20: சாணார்பட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள முத்துலிங்கபுரத்தை சேர்ந்தவர் அழகர்சாமி (39). இவர், பேவர் பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் காலை நத்தத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். சாணார்பட்டி அருகே விலக்கு ரோடு பகுதியில் வந்த போது திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (24) என்பவர் ஓட்டி வந்த டூவீலர், அழகர்சாமி டூவீலர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அழகர்சாமியை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அழகர்சாமி உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.