தேவதானப்பட்டி, ஆக. 7: தேவதானப்பட்டி அருகே ஜி. கல்லுப்பட்டி பள்ளி வாசல் தெருவைச் சேர்ந்தவர் சோப்பு விற்கும் வியாபாரி ஜாபருல்லா (43). இவர் நேற்று முன்தினம் தனது டூவீலரில் வத்தலக்குண்டு சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, காட்ரோடு அருகே ஜி.மீனாட்சிபுரம் பிரிவில் சாலையை கடக்கும் போது பெரியகுளத்தில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி டூவீலரில் சென்ற ஆத்தூர் தாலுகா அ.புதூரைச் சேர்ந்த சுரேஷ் மகன் கோகுல்(19) ஓட்டிய டூவீலர் ஜாபருல்லா டூவீலர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜாபருல்லா தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.