சிவகங்கை, ேம 27: மாவட்டத்தில் சிறுவர்கள் டூவீலர் ஓட்டுவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
மாவட்டத்தில் சமீபகாலமாக மாணவ, மாணவிகள் டூவீலர்கள் ஓட்டுவது அதிகரித்துள்ளது. இதில் லைசென்ஸ் பெற தகுதியில்லாத 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவிகளே அதிகம். முறையாக வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி இல்லாததால் தினமும் சிறிய அளவிலான வாகன விபத்து நடப்பது தொடர்கதையாக உள்ளது. இதனை தடுக்க மோட்டார் வாகன துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், லைசென்ஸ் இன்றி ஓட்டுவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.