ஆண்டிபட்டி, மார்ச் 10: தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அசுர வேகத்தில் வாகனங்களை ஓட்டி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்க மோட்டார் வாகன துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், லைசென்ஸ் இன்றி ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.