சேலம், செப்.5: இடைப்பாடி அருகேயுள்ள கோணசமுத்திரம் கன்னியம்பட்டியை சேர்ந்தவர் மணிவண்ணன்(27). இவர் ஆட்டையாம்பட்டியில் உள்ள செவிலியர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதற்காக கல்பாரப்பட்டியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். நேற்று முன்தினம், அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த டூவீலரை, 2 பேர் திருடிக்கொண்டு செல்வதை பார்த்த மணிவண்ணன், சத்தம் போட்டார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் டூவீலரை எடுத்துச்செல்பவர்களை துரத்தி சென்று மடக்கினர்.இதுகுறித்து ஆட்டையாம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்களிடம் 2 பேரையும் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பக்கமுள்ள வெண்ணந்தூர் சர்க்கரை தோப்பை சேர்ந்த குணா(எ)சுரேஷ்குமார்(32), குமார்(24) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்தனர். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டூவீலரை திருடி சென்ற 2 பேரை விரட்டி பிடித்த பொதுமக்கள்
previous post