திருச்சி, மார்ச் 20: திருச்சியில் டூவீலர் திருடிய நபரை போலீசார் தேடுகின்றனர். திருச்சி காஜாமலை இபி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் தமீம் அன்சாரி (37). இவர் டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். மார்ச் 16ம் தேதி இபி காலனி குடியிருப்பு பகுதியில் தனது டூவீலரை நிறுத்தி விட்டு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது டூவீலர் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
டூவீலரை திருடியவருக்கு போலீஸ் வலை
0