சேலம், ஜூன் 17: சேலம் பழைய பஸ்நிலையத்தில், டவுன் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன், எஸ்ஐ நவநீதகுமார் ஆகியோர் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் டூவீலரில் சந்தேகப்படும்படி 2 பேர் சென்றனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர்களில் ஒருவர் அங்கிருந்து தப்பினார். போலீசாரிடம் சிக்கிய நபரிடம் விசாரித்தபோது, கோலத்துகோம்பை பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(25) என்பது தெரியவந்தது. பின்னர் அவரது வண்டியில் 98 மதுபாட்டில்களும் இருந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சந்து கடை மூலமாக விற்பனை செய்ய அந்த மதுபாட்டில்கள் கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து தப்பியோடிய சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த குமார் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர் மீது 5க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
டூவீலரில் 98 மதுபாட்டில் கடத்திய வாலிபர் கைது
0
previous post