அரூர், ஆக.20: அரூர் அருகே எம்.வெள்ளாம்பட்டியைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தனது டூவீலரில், அரூர் பஸ் ஸ்டாண்டிற்கு சொந்த வேலை காரணமாக சென்றார். பின்னர், வீடு திரும்புவதற்காக டூவீலரை ஸ்டார்ட் செய்தபோது, லைட் டூமில் இருந்து ஒரு பாம்பு மேலே வந்தது. இதை கண்ட பிரசாந்த் அதிர்ச்சியடைந்து ஓடினார். பின்னர், அந்த பாம்பு மீண்டும் லைட் டூமுக்குள் சென்று விட்டது. பின்னர் அங்கிருந்த மதுசூதனன் என்பவர், அருகில் இருந்த நபர்கள் உதவியுடன், டூவீலரின் டூமை அகற்றி, சுமார் 3அடி நீளம் கொண்ட விஷ தன்மை இல்லாத பாம்பை லாவகமாக பிடித்தார். பின்னர், அருகில் இருந்த வனப்பகுதியில் பாம்பை விட்டார்.
டூவீலரில் புகுந்த பாம்பு மீட்பு
previous post