தூத்துக்குடி, ஜூலை 30: மேலஆழ்வார்தோப்பை சேர்ந்தவர் பாஸ்கர் (52). டீ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த இவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த தின்னரை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் பாஸ்கரை தடுத்து, அவர் மீது தண்ணீரை ஊற்றி மீட்டனர். விசாரணையில், தனது வீட்டுக்கு செல்லக்கூடிய பாதையை சிலர் ஆக்கிரமித்து இருப்பதாகவும், இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என கூறினார். இதனால் வேறு வழியின்றி தீக்குளிக்க முயன்றதாக பாஸ்கர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சிப்காட் போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
டீ வியாபாரி தீக்குளிக்க முயற்சி
56
previous post