கரூர், ஆக. 3: தொழில் நகரமான கரூரில் மூன்று முக்கிய தொழில்களை கொண்டுள்ளது. இந்த தொழில் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களை மையப்படுத்தி மாநகராட்சி பகுதியில் நூற்றுக்கணக்கான டீக்கடைகள் செயல்படுகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் டீ குடிப்பதை கரூர் மாநகர மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில், சில டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதாக கூறப்படுகிறது. கலப்பட டீத்துள் காரணமாக பல்வேறு நோய்கள் உருவாக அதிகளவு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே, சில டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்பாடு உள்ளதா? என்பது குறித்து கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, கலப்பட டீத்தூள் பயன்பாட்டை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.