பாடாலூர், ஆக. 14: குடும்பபிரச்னை காரணமாக விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (35). ஓட்டுநர். இவர் மீது போக்சோ வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் செல்வராஜ் குடும்ப பிரச்சனை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. செல்வராஜ் தனது அண்ணனுக்கு செல்போனில் இறந்து போவதாக விரக்தியுடன் கூறியுள்ளார். செல்வராஜின் அண்ணன் பதறியடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு செல்வதற்குள் செல்வராஜ் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.