புதுச்சேரி, ஜூன் 6: பாகூர் மாரியம்மன் நகரை சேர்ந்தவர் துரை (70), டிரைவர். கடந்த 1ம் தேதி துரை, கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த வேம்பு மற்றும் அவரது உறவினர்களை திருக்கோவிலூரில் உள்ள கோயிலுக்கு அழைத்து சென்று மீண்டும் அவர்களை வீட்டில் இறக்கி விட்டார். அப்போது அங்கு வந்த கமல்நாதன் என்பவர், துரையிடம் தகராறு செய்து, அவரை திட்டி சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அக்கம், பக்கத்தினர் துரையை மீட்டு சிகிச்சைக்காக கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுகுறித்து துரை, கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிரைவரை தாக்கியவர் மீது வழக்கு
0